மேஜர் ஜெனரல் சொர்ணம். உன் வாழ்வு ஓர் வரலாறு - அண்ணன்

Saturday, May 22, 2010



தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் விதையாகி வெடித்து வெளிவந்த வேங்கை.
எங்கள் விலங்குகளைச் சிதறடிக்க விடுதலைப் புலியாகியவன். எங்கள் அன்னை ©மிக்காக அனைத்தையும் துறந்தவன். நெஞ்சில் விடுதலையெனும் நெருப்பேந்தியவன். அவன் வாழ்வில் அவன் உதடுகள் அண்ணன் என்ற சொல்லைத்தான் அதிகபங்கு உச்சரித்தது. தலைவனைத் தன் கண்ணுள் வைத்ததால் அவன் தலைவனின் கண்ணாகியவன். தானைத் தலைவனின் எண்ணக் கருவுக்கு உருவமைத்தவன். அவன்தான் புலிகளின் மூத்த தளபதி புகழ் ©த்த தளபதி சொர்ணம். தம்பியை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர்தான் தயாளன். தந்தை யோசப் தாய் திரேசம்மா (பரி©ரணம்) என்ன தவம் செய்தனரோ? ஒரு உலகம் போற்றும் மாவீரனை மகனாகப் பெற. தாய் திரேசம்மாவின் மடி அது ஓர் புலியுறங்கிய குகை. திருகோணமலை அது எப்பொழுதும் அலையெழுந்து ஆர்ப்பரிக்கும் ஓர் அழகிய நகரம். கடல் ©த்த ©மி. எங்கள் தமிழீழத்தின் தலைநகர் எனும் சிறப்பைப் பெற்றது. அந்தத் தலைநகர் தன் பங்கிற்காக தானைத் தளபதியைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உவந்தளித்தது. திருகோணமலை அரசடி அது அன்று திருமலை வாழ் சிங்களவரின் வயிற்றில் புளியைக் கரைக்குமிடம். சிங்களவரைப் பயத்தில் சிறுநீர் போகவைக்குமிடம். திருமலை அரசடி வாழைத்தோட்டம் அதுதான் தயாளனைப் பச்சிளம் குழந்தையாக பாலருந்தும் பாலகனாக பள்ளிச் சிறுவனாக பாடசாலை மாணவனாக தன் மடியில் சுமந்த மண். மலையென எழும் கடலலைகளை அன்றாடம் எதிர்த்து வாழ்ந்த குடும்பத்தில் பிறந்ததால் அலையையும் புயலையும் எதிர்த்து வளர்ந்தது அவர் வீரம். சிறுவயதிலேயே அவன் குறும்புகளுக்குக் குறைவில்லை. அது மட்டுமன்றி உடற்பயிற்சியிலும் தற்காப்புக் கலைகளிலும் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். அவர் நண்பர்கள் கூட்டத்தில் என்றும் அவர் தலை உயர்ந்து நிற்கும் கலகங்கள் வந்துவிட்டாலோ அவர் கரம் ஓங்கிநிற்கும். திருகோணமலை மாவட்டம் அன்று 80வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த மண். அதைச் சிங்கள ©மியாக்க சிங்களவர் மும்மரமாகச் செயற்பட்டகாலம். தயாளன் சிறுவயதிலேயே துவேசம் கொண்ட சிங்களவர் முப்படைகள் பொலீசாலும் தமிழ் மக்கள் படும் வேதனைகளையும் கொடுமைகளையும் கொலைகளையும் கண்டு கொதித்தெழும்பியவன். இதனால் வெறிகொண்ட சிங்களத்தின் கண்கள் தயாளனைக் குறிவைக்கத் தொடங்கியது. உண்மையாகவே எங்கள் தமிழ் மண்ணை எங்கள் தமிழீழ எல்லைகளைக் காக்கவேண்டுமென்றால் அது எங்கள் தலைவனால் அமைக்கப்பட்ட புலிகள் அமைப்பில்தான் இணையவேண்டும் என்பதை தம்பி தயாளன் தூரநோக்கோடு நன்கு அறிந்துகொண்டார். அவர் தன் விடுதலை வேட்கையை வீச்சாக்க திருகோணமலை அர்ச் சூசையப்பர் கல்லூரியில் பயின்ற உயர்தரக் கல்வியை இடைநிறுத்திக்கொண்டு 12.09.1983ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார். தானைத் தலைவனின் வழிநடத்தலில் புடம்போட்ட தங்கமாகப் புதுப் பொலிவு பெற்று புதுப் புலியாகி எங்கள் தேசத்தின் எல்லைகளுக்கு தன்னுயிரை வேலியாக்கினான். அவன் கரங்களில் சுமந்த கருவிகள் பகைவனின் பகைமுறித்தது. அவன் மனங்களில் தோன்றிய பேராற்றல் பகைவனின் சதிமுறித்தது. தலைவன் கூறும் தத்துவங்களை எல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத் தளபதி. கயமைத்தனங்களைக் கட்டவிழ்த்துவிட்ட சிங்கள இராணுவத்திற்கோர் சிம்மசொற்பனம். களத்திலே இவன் இறங்கிவிட்டால் இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை ©க்கும். இவன் வெறுங்கையோடு வீதயிpல் வந்தாலும் எதிர்கொள்ளும் எதிரிகள் தலைதெறிக்க விழுந்தடித்து ஓடுவர். இவன் தலைவன் காட்டிய நெறியில் தவறியதில்லை இவன் வைத்த குறியும் தப்பியதில்லை. அழகிய புன்முறவலும் அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன் என் தம்பி. பட்டத்து யானைபோன்று நெடிய கம்பீரத் தோற்றம். புது யுகத்தின் அத்தியாயத்தை எழுதத் துடித்துநின்ற தானைத் தளபதி. தமிழனின் விடிவிற்காய் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆக்ரோசமான போர் வியூகங்களைக் கண்டு அகமகிழ்ந்த அன்னைத் தமிழும் அரியணை ஏற ஆயத்தமானாள். ஆனாலும் உலகத்தின் துரோகக் கரம்ஒன்று பின்னால் தொடர்ந்ததை யாரறிவார்?. இருபதற்கும் மேற்பட்ட உலகில் சக்திவாய்ந்த நாடுகள் முண்டுகொடுக்க இனவெறிகொண்ட சிங்களம் கூன் நிமிர்ந்து எமது சொந்தங்களை வெறித்தனமாய் வேட்டையாடி எங்கள் தேசத்தைச் சுடுகாடாக்கியது. அன்று உன்னதமான தமிழீழத் தலைமைத் தளபதி வீழ்ந்துவிட்டான். ஆம் என் தம்பி வீழ்ந்துவிட்டான். ஆளரவமற்ற இருட்புலத்திலே புதைக்கப்பட்டான். அவனுக்காக யாரும் கண்ணீர் சிந்தினார்களா? தெரியவில்லை. யாரோ அவனைக் கல்லறைக்கு எடுத்துச் சென்றனரே. அவனின் புகழ்வாய்ந்த பெயர் கூறிட அங்கே சிலுவையோ சமாதியோ மண்டபமோ ஏது மில்லையே. அங்கு தலை சாய்ந்;திருந்த புல்லிதழ்கள் அவனின் மரணத்தை அறிந்திருக்கும். முள்ளிவாய்க்கால் கரையை மோதிச் சீறியடிக்கும் அலைகளே அவன் மரணத்திற்குச் சாட்சி. வல்லமை வாய்ந்த அவ் அலைகளால் கூட தொலை தூரத்திற்கு அந்தச் செய்தியை எம்மிடம் கொண்டுவர முடியாமற் போய்விட்டதே. இன்று ஆண்டு ஒன்று ஆனபின்பும் நீ இறுமாப்போடு எழுந்து வருவாயென்று நான் எதிர்பார்த்தேனே. என் கனவுகள் பொடியானதே. புறநானூற்றின் வீரத்தை புதிதாகப் பிறப்பித்த மாவீரன் விடுதலை தேடி வேகத்தோடு உயர்ந்து வீசியடித்த பேரலை இருபத்தாறு வருடங்களாக ஓயாது சுழன்றடித்த சூறாவளி ஓய்ந்துபோனது. மரணித்துவிட்ட எங்கள் விடியலே பலவீனமான எம் இனத்தின் பலமான உயிராயுதமே எமது திமிரின் அடையாளமே எங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட் டாயோ? உன்னைச் சகோதரமென உரிமை கொண்டாடிப் பெருமைகொள்ளும் சகோதர ர்களில் ஒருவன். யேர்மன் திருமலைச்செல்வன்.

Read more...

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து

Thursday, May 13, 2010


நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்பயிற்சி - தந்திரம் - துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவுஇலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை.இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.மலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால் இருக்கும் வரை, எந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பiயும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.உழைப்பவனே பொருளுலைகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தின்றான்.நாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.தமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்

Read more...

About This Blog

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP